Friday, August 15, 2014

Car Festival held at Veerampattinam


Annual car festival held at Veerampattinam

PUDUCHERRY, August 16, 2014

A large number of devotees pull the chariot of Sri Sengazhuneer Amman in Veerampattinam in Puducherry, on Friday.— Photo: S.S. Kumar
A large number of devotees pull the chariot of Sri Sengazhuneer Amman in Veerampattinam in Puducherry, on Friday.— Photo: S.S. Kumar

Devotees from Puducherry and the neighbouring districts of Tamil Nadu participated in the annual temple car festival at Veerampattinam near here on Friday.

CM pulls chariot

Chief Minister N. Rangasamy, accompanied by Speaker V. Sabapathy, Ministers P. Rajavelu and T. Thiagarajan pulled the chariot of Sri Sengazhuneer Amman. Mr. Rangasamy later offered prayers at the sanctum sanctorum of the temple.


Also read the related stories

செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டம்

First Published: 16 August 2014 04:13 AM IST

புதுவையை அடுத்த வீராம்பட்டினம் செங்குழுநீரம்மன் கோயில் தேரோட்ட உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.

இக்கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு திருவீதிவுலாவும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பேரவைத் தலைவர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பாஸ்கர் எம்எல்ஏ, வாரியத் தலைவர்கள் ஞானசேகரன், பாஸ்கரன், பொன்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெயமூர்த்தி காங்கிரஸ் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரன் தலைமையிலான குழுவினர், ஊர் மக்கள் செய்தனர்.


Also read the related stories

வீராம்பட்டினம் கோவிலில் ஆடிப்பெருவிழா இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்: 07 ஆக 2014  02:05

புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஆடிப்பெரு விழா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், ஆடிப்பெருவிழா உற்சவம் இன்று 7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

இதையொட்டி, நேற்று மாலை 6.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இன்று காலை 4.௦௦ மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 

தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 

முக்கிய விழாவான திருத்தேர் உற்சவம், வரும் 15ம் தேதி நடக்கிறது. 

16ம் தேதி இரவு 9 மணிக்கு தெப்பல் உற்சவம், 22ம் தேதி இரவு 9.௦௦ மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.